×

வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : நாடாளுமன்றம் நோக்கி கருப்பு வெள்ளி பேரணி நடத்த முடிவு!!

டெல்லி : புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிரோமணி அகாலி தளம் கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி அறிவித்துள்ளதால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. வேளாண் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து டெல்லியில் சிரோமணி அகாலி தளம் கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி கருப்பு வெள்ளி பேரணியை அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் அடைக்கப்பட்டதை கண்டித்து அகாலி தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி பேரணிக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்து ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் ஓராண்டாக போராடி வருகின்றனர்….

The post வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : நாடாளுமன்றம் நோக்கி கருப்பு வெள்ளி பேரணி நடத்த முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Black Friday ,Parliament ,Delhi ,Shiromani Akali Dal ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...